நம் சேர்மன்
- NamZone6

- Oct 4, 2023
- 1 min read
நாள்: 03/10/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி. க நகர் தொகுதி 74வது வார்டுக்கு உட்பட்ட மங்களாபுரம் லாரி டிப்போவில் புதிய லாரிகளை பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் வணக்கத்திற்குரிய மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி, பகுதி செயலாளர் எ.நாகராசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் டி.லோகேஷ், பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, 6வது மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர், செயற்பொறியாளர், கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் 64, 65வது வார்டுக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாரியம் மற்றும் மழைநீர் வடிகால் வாரியம் பணிகளை துரிதப்படுத்த சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் 66வது வார்டில் அமைந்துள்ள பெருந்தேவி நகரில் மழை காலங்களில் மழை நீர் சாலையில் தேங்காதவாரு புதிய குழாய் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது செயற்பொறியாளர், பகுதி செயலாளர் எ.நாகராசன் MC ,மாமன்ற உறுப்பினர்கள் சாரதா, யோகபிரியா தனசேகர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் இருந்தனர்.

















Comments