நம் சேர்மன்
- NamZone6

- Nov 1, 2023
- 1 min read
நாள்: 01/11/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மைபணியாளர்களுக்கான தொடர் மூன்று நாள் வருகின்ற 3-ம் தேதி 4-ம் 5-ம் தேதி ஆகிய நாட்களில் முழு உடல் பரிசோதனை மாபெரும் மருத்துவ முகாமில் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு பயனடைய 65,66,67,68 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு நேரில் சென்று ஆலோசனை வழங்கப்பட்டது. உடன் மாமன்ற உறுப்பினர்கள் சாரதா, யோகபிரியா, தாவூத், அமுதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து 69வது வார்டுக்கு உட்பட்ட கோபால்ரெட்டி காலனி மற்றும் ஜெகநாதன் தெருவில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதபடுத்த துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களிடையே நேரில் சென்று நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

















Comments