நம் சேர்மன்
- NamZone6

- Dec 15, 2023
- 1 min read
நாள்: 07/12/2023
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களது தலைமையில் 6வது மண்டல அலுவலகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுதல், முகாம்களிலுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பகுதி செயலாளர்கள், மண்டல குழு தலைவர், துறை சார்ந்த உயர் அதிகாரிகள், மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து வார்டு 69க்கு உட்பட்ட துலுக்காநத்தம்மன் கோயில் சந்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.











Comments