நம் சேர்மன்
- NamZone6

- Jun 23
- 1 min read


நாள்:22/06/2025
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களின் முன்னிலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி .மகேஷ்குமார் அவர்கள் தலைமையில் "உண்ண வைத்து மகிழ்வோம்! உடன்பிறப்பாய் நெகிழ்வோம்!" எனும் 1500 நபர்களுக்கான மாபெரும் அறுசுவை அசைவ விருந்து இன்று 22/06/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி அளவில் ஜி. கே .எம் காலனி அரிச்சந்திரன் திடல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த அசைவ விருந்தினை மாண்புமிகு அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக – கொளத்தூர் மேற்கு தொகுதிட்பட்ட மாவட்ட, தொகுதி, பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், பாகமுகவர்கள், கழக செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறுசுவை அசைவ உணவை உண்டு மகிழ்ந்தனர்.





Comments