நம் சேர்மன்
- NamZone6
- Nov 8
- 1 min read
நாள்:06/11/2025
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வார்டு 69 தில் பாகம் எண் 217,220,236 சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R) படிவத்தை 69வது வார்டு மாமன்ற உறுப்பினர் 6 வது மண்டல குழு தலைவர் திருமதி. சரிதா மகேஷ்குமார் அவர்கள் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. உடன் மாவட்ட பிரதிநிதி ஆரோக்கிய தாஸ் பாக முகவர்கள் அர்ஜுன்., கௌரி., யுவராஜ்., BLO., BLC மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து வார்டு 69க்குட்பட்ட முத்துக்குமாரப்ப சாலையில் நடைபெற்று வரும் சமுதாய நல கூட பணி, GKM காலனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி, GKM காலனி 13வது தெரு போன்ற பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகராட்சி அதிகாரிகள்,பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் இருந்தனர்.







